காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் அங்கு மாதத்துக்கு 5 இளைஞர்கள் வீதம் தீவிரவாத குழுக்களில் இணைவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மாதத்துக்கு 14 இளைஞர்கள் வீதம் தீவிரவாதிகளுடன் இணைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பின்னர் இந்த விகிதம் குறைந்துள்ளது.
முந்தைய காலங்களில் தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் கூடும் போது இளைஞர்கள், தீவிரவாத குழுக்களுடன் இணைந்து வந்த நிலையில், தற்போது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே, அதுவும் 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுவது குறைந்துள்ளது.