நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தில் சிஐஎஸ்எப் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு செய்து பணியில் சேர்ந்த காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் அசாமை சேர்ந்த பிரிகு பாருயா என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவரது சான்றிதழ்களை சிஐஎஸ்எப் அதிகாரிகள் சரிபார்த்தபோது கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இரு தேர்வுகளில் கையெழுத்து முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டு, சிம்லாவில் உள்ள கையெழுத்து சரிபார்ப்பு மையம் உறுதி செய்தது.
இதனையடுத்து பிரிகு பாருயா பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது பணகுடி காவல் நிலையத்தில் ஆள்மாறட்டம் மற்றும் மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.