ஆந்திராவில் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக டிஜிபி அந்தஸ்துக்கு இணையான மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
1989ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஏ.பி.வெங்கடேஸ்வரா ராவ், தனது மகனின் நிறுவனத்துக்கு இஸ்ரேலை சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக பெற்றுத்தர முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் உளவுத்துறை மற்றும் காவல்துறை நடைமுறைகளை அந்நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதாகக் கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜயவாடாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அவர் அரசின் அனுமதியின்றி அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமான அதிகாரி என்பதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.