கேரளாவில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகத்தால் சீனாவில் இருந்து 345 வந்த பயணிகளுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் 326 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று முடிவுகள் தெரிவித்துள்ளன.
மற்றவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 252 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என்பதால் 34 மருத்துவமனைகளில் இரவும் பகலுமாக கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மூன்று பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் முதல் முதலாக அந்த அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருச்சூரை சேர்ந்த மாணவியின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வூகானில் இருந்து திரும்பி வந்த அந்த மாணவிதான் இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்புடையவர் என்று கூறப்பட்டது. மேலும் இரண்டு மாணவர்கள் ஆழப்புழா மற்றும் காசர்கோடு பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் சீனாவில் இருந்து ஒன்றாக திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.