இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டால் வங்காள தேசத்தில் உள்ள மக்களில் பாதி பேர் இந்தியாவுக்கு வந்து விடுவார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் ராகுல்காந்தி அவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யார் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவார்கள் என்றும் டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு அவர்கள் குடியுரிமை கோருகிறார்கள்.
130 கோடி இந்தியர்களில் ஒரேயொரு முஸ்லீம் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 130 கோடி இந்தியர்களைப் பற்றி கவலைப்படாமல் பாகிஸ்தான், வங்காள தேச முஸ்லீம்கள் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.