உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு நகரங்களின் பெயர்களை மாற்ற அங்குள்ள சாமியார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாக் மேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்கள், பஸ்தி மாவட்டத்தின் பெயர் வசிஷ்ட நகர் என மாற்றும் திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
யோகி ஆதித்யநாத் அரசு அலகாபாத்தை பிரயாக்ராஜ் என மாற்றியதைப் போன்று முகலாயப் பெயரைக் கொண்ட நகரங்களின் பெயர்களை மாற்ற வலியுறுத்தியுள்ளனர். மாநிலத்தில் பல நகரங்கள் முகலாய மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மறு பெயரிடப்பட்டதாகவும், அவற்றின் அசல் இந்துப் பெயர்கள் திருப்பிக் கொடுக்கக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
ஆசாம்கர், அலிகார், முசாபர்நகர், ஷாஜகான்பூர், ஃபதேபூர், புலந்த்ஷாஹர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களின் பெயர்களை மாற்ற சாமியார்கள் வலியுறுத்தியுள்ளனர்.