டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசமாக இருந்த நிலையில் வேகமான சுவாசத்தை தவிர்க்க மக்கள் உழைப்பை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.
சுவாசிக்கும் காற்றின் தர அளவீட்டு எண் 201 முதல் 300 வரை மோசம் எனவும், 301 முதல் 400 வரை மிக மோசம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை காற்றின் தரம் குறித்த ஒட்டுமொத்தக் குறியீடு 305-ஆக இருந்ததாக ஆய்வு நிறுவனமான சஃபர் தெரிவித்தது. இதனால் மக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சுவாசப் பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டது.
மக்கள், குறிப்பாக இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட அல்லது கடின உடல் உழைப்பைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.