குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள், உண்மையில் நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்த மோடி மீது தான் கோபமாக இருக்கிறார்கள் என்று பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு உண்மையில் அச்சட்டத்தின் மீது கோபமில்லை என்றார்.
கடந்த 6 மாதங்களில், முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீருக்கான 370 வது பிரிவை ரத்து செய்தது, ராமர் கோயில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு போன்ற நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததால்தான் மோடி மீது போராட்டக்காரர்கள் கோபத்தில் உள்ளதாக கூறினார்.