மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று NPPA எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விலையை குறிப்பதும் அரசுத் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்காமல் இருப்பதும் வழக்கமாக உள்ளது. இத்தகைய நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம், கூடுதலாக வசூலித்த விலையை வசூலித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அண்மையில் நடைபெற்ற NPPA ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.