காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீரில், ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை அரசு பரிந்துரை செய்தது என்றும் அதில் 4 இடங்களை தேவஸ்தான குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கோயில் கட்டுவதற்கான இடத்தை இறுதி செய்ய தனது தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் என்றும் அனில்குமார் கூறினார்.