டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று பாஜக அளித்த புகாரை அடுத்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதரீதியான வேறுபாட்டை தூண்டி விட்டு வாக்குகளைப் பெற கெஜ்ரிவால் முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தேர்தல் விதிமுறையை மீறிய செயலாகும் என்றும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அண்மையில் போராட்டக்காரர்களுக்கு கெஜ்ரிவால் பிரியாணி விநியோகிப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதும் சர்ச்சைக்கு ஆளானது. அவரிடமும் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியிருந்தது.