சபரிமலை கோவில் நகைகளின் முழுவிவரங்களை கணக்கெடுக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
சபரிமலை கோவில் நகைகளை பந்தளம் அரச குடும்பம் பாதுகாத்து வருகிறது. இதுதொடர்பாக, பந்தளம் அரச குடும்பத்திற்குள்ளேயே இரு பிரிவினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில், சபரிமலை கோவில் நகைகளை கணக்கெடுக்க, ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் நாயரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதியரசர் ராமச்சந்திரன் நாயரை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கோவில் நகைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்குமாறு ஏற்கெனவே கேரள அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
தனியார் வசம் உள்ள அந்த நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.