விமான நிறுவனத்தின் மறுப்பை தொடர்ந்து சீனாவின் குன்மிங் விமான நிலையத்தில் தவிக்கும் 21 இந்திய மருத்துவ மாணவ-மாணவிகள், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனின் தலையீட்டை அடுத்து இன்று இரவு 11 மணி அளவில் கொச்சி வந்து சேர்வார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
கொரானா பரவும் நிலையில் இந்த 21 பேரும் சிங்கப்பூர் வழியாக இந்தியாவர திட்டமிட்டு நேற்று காலை விமான நிலையம் வந்தனர். ஆனால் போர்டிங் பாஸ் பெற்ற பிறகும் அவர்களை விமானத்தில் ஏற்ற தாய் ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டதால் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, தாய் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திடம் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசி அவர்கள் இந்தியா திரும்ப உதவி செய்திருக்கிறார்.