200 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பிரணாஷ் (Pranash)என்ற புதிய ஏவுகணை இந்தியா தயாரிக்க உள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ DRDO பிரஹார் என்ற, 150 கிலோமீட்டர் தூர இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணையை தயாரித்தது.
அதே ரகத்தில், இன்னும் அதிக தொலைவுக்கு சென்று தாக்கும் ஏவுகணை வேண்டும் என்ற ராணுவத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பிரணாஷ் என்ற புதிய ஏவுகணையை டிஆர்டிஓ தயாரிக்கிறது. தரையிலிருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாக பிரணாஷ் உருவாகிறது.
இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டு சோதனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்து செல்லாது என்பதோடு, திட எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். அணுஆயுதங்களை சுமந்து செல்வதற்கு பிரிதிவி வரிசை ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.