மும்பையில் இருந்து அகமதாபாதிற்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச கார்ப்பரேசன் ஏஜன்சி நிறுவனமும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. மகராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநில அரசுகளும் தலா 5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளன.
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே புல்லட் ரயில் திட்டத்தின் செலவுகள் மிக அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்த நிலையில் தற்போது மத்திய அரசு பெருந்தொகையை ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு புல்லட் ரயில் திட்டத்தை தொடங்குவதில் பிரதமர் ஆர்வம் கொண்டுள்ளார்.