நிர்பயா கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நால்வரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை நிர்ணயிக்கவும் மத்திய அரசு கோரியுள்ளது. குற்றவாளிகள் மூன்று பேரின் கருணைமனுக்களை இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார்.
இதனால் சட்டரீதியான வாய்ப்புகள் குற்றவாளிகளுக்கு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், ஒருவாரத்திற்குள் அனைத்து சட்ட ரீதியான வாய்ப்புகளையும் பயன்படுத்த குற்றவாளிகள் நால்வருக்கும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் மனுவை இன்று நீதிபதி பானுமதி தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள்அமர்வு பகல் 12.30 மணிக்கு விசாரணை நடத்த உள்ளது.