அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்க உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு முதன் முதலாக மத்திய அரசு ஒரு ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கில், சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு 3 மாதத்திற்குள் உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது, அதன்படி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் உள்துறை அமைச்சக செயலாளர் முர்மு இன்று மத்திய அரசின் சார்பாக ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் நன்கொடை அளித்தார்.