கர்நாடக அமைச்சரவையில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள 10 அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக அமைச்சரவையில் முதலமைச்சர் எடியூரப்பாவையும் சேர்த்து ஏற்கனவே 18 பேர் உள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கப்படும் என அண்மையில் எடியூரப்பா அறிவித்தார்.
மேலும் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு, பதவி வழங்கப்படும் எனக் கூறினார்.
அந்த வகையில் பாஜக ஆட்சி அமைய உதவிய எம்.எல்.ஏக்கள் 10 பேர் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக அமைச்சரவையில் இன்று பதவியேற்றவர்களுடன் சேர்த்து 28 அமைச்சர்கள் தற்போது பதவியிலுள்ள நிலையில், மேலும் 6 இடங்கள் காலியாக உள்ளன.