டெல்லி ஷஹின்பாக் பகுதியில் துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சியில் கடந்தவாரம் சேர்ந்தவர் என செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் ராஜேஷ் தியோவுக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பணியையும் வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியின் பெயர் குறிப்பிட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
இதையடுத்து ராஜேஷ் டியோவின் செயலை கண்டித்துள்ள தேர்தல் ஆணையம், விசாரணை நடைபெறும் ஒரு வழக்கின் விவரங்களை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இதனால் அவரை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.