நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளியான அக்சய்குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். அக்சய்குமார் சிங், பவன், வினய், முகேஷ் ஆகியோருக்கு இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் அக்சய் குமார் சிங் தாக்கல் செய்த கருணை மனு குடியரசுத் தலைவரால் இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முகேஷ், வினய் ஆகியோரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்.
நான்கு குற்றவாளிகளையும் ஒன்றாகவே தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளதால் இவர்களின் மனுக்கள் மீதான விசாரணையால் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய தேதியை குறிக்குமாறு மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து சட்டப்பூர்வமான வாய்ப்புகளையும் ஒருவாரத்திற்குள் பயன்படுத்தும் படி குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.