மும்பை புறநகரான தானேயில் மின்சார ரயிலில் இருந்து மூன்று பயணிகள் தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையில் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்நிலையில், நேற்று சிஎஸ்டி ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு சென்ற ரயிலில் பயணித்த ஹாஜி ரயீஸ் அகமது என்ற 53 வயதான பயணி ரயிலில் தொங்கியபடியே சென்ற போது, பிடி நழுவி கோரேகான் ரயில் நிலையம் அருகில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதே போல் மேலும் இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த ஒரே மாதத்தில் நெரிசலான ரயில்களில் தொங்கியபடி சென்ற 4 பயணிகள் பயணிகள் இதேபோன்று விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.