கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் பத்து அமைச்சர்கள் இன்று பெங்களூரில் பதவியேற்க உள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, கட்சித் தலைமையின் உத்தரவுப்படி பத்து பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிவித்தார்.
டெல்லியில் தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர் மேலும் சிலரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள இருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்க காரணமாக இருந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 13 அதிருப்தியாளர்கள் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களில் பத்து பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுகிறது.