இலங்கையின் 72வது சுதந்திர தினவிழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாதது அங்குள்ள தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே, சுதந்திர தினவிழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க தடை விதித்து உத்தரவிட்டார்.
அதன்படி தலைநகர் கொழும்புவில் கொண்டாடப்பட்ட 72வது சுதந்திர தினவிழாவில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.