இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையற்ற வகையில் தலையிட்டதால், பாமாயில் ஏற்றுமதி விவகாரத்தில், பெரும் இழப்பை எதிர்கொண்டிருக்கும் மலேசியா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம், கிட்டத்தட்ட சரணாகதி அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிஏஏ ஆகிய விவகாரங்களில் இந்தியாவிற்கு எதிரான மலேசியாவின் நிலைப்பாட்டால், இந்திய அரசு கடும் அதிருப்தி அடைந்தது. இதையடுத்து, மலேசியாவிற்கு அதன் பாணியிலேயே பாடம் புகட்டும் வகையில், பாமாயில் இறக்குமதிக்கு, தடை விதிக்கும் வகையில், அதன் இறக்குமதி அளவைப் பெருமளவில் குறைத்தது.
இதனால், பாமாயில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நம்பியிருக்கும் மலேசியா, ஆட்டங்காணத் தொடங்கியது. இந்நிலையில், மலேசிய பாமாயில் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்காலிகமானதுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.