புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருமாம்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் கடந்த 31ஆம் தேதி வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் கொலையான முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் கொலைக்கு முக்கிய சாட்சியாக இருந்த சாம்பசிவத்தை கொலை செய்துவிட்டால் வழக்கிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற நோக்கில் இந்தக் கொலை அரங்கேறியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
விசாரணையின்போது தப்பிக்க முயன்ற முக்கிய குற்றவாளிகளான அன்புவுக்கும் அமுதவனுக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.