ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை டெல்லி அழைத்துச் செல்ல முயன்று கைதான காவல் துறை அதிகாரி தேவிந்தர் சிங் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காஷ்மீரின் பல இடங்களில் நேற்று சோதனைகளை நடத்தினர்.
கடந்த ஜனவரி 11ம் தேதி இரண்டு முக்கியத் தீவிரவாதிகளை தமது வாகனத்தில் அழைத்துச் சென்ற தவிந்தர் சிங் காவல்துறையினரிடம் சிக்கியதை அடுத்து பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பல்வேறு தனியார் அலுவலகங்கள், வீடுகளில் நேற்று அதிரடி சோதனைகளை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.