ஆந்திர மாநிலத்தில் கணவரை இழந்த பெண்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சுமார் 42 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று அவர்களின் ஓய்வூதியத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக கிராமங்கள் தோறும் தன்னார்வ அமைப்பினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிக்கும் நடவடிக்கையை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது.
தமது தேர்தல் பிரச்சார வாக்குறுதியில் இதனை குறிப்பிட்டிருந்த ஜெகன்மோகன் இப்போது இதனை செயல்படுத்தி வருகிறார். 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்த ஜெகன்மோகன், விடுபட்டவர்கள் தலைமை செயலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.