பிரதமர் மோடி இன்று முதன்முதலாக டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் கார்கர்தூமா எனுமிடத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரும் இன்று முண்ட்கா, சதார் பஜார், கிரேட்டர் கைலாஷ் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்த நிலையில் பாஜக தரப்புக்கு மோடியும் அமித் ஷாவும் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.