டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் முதல்7,500 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்துள்ளது.
அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு (graduates) மாதம் 5,000 ரூபாயும், வேலையில்லா முதுகலை பட்டதாரிகளுக்கு (post-graduates) மாதம் 7500 ரூபாயும் உதவித் தொகையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வடிவில் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Register of Citizens (NRC), the National Population of Register (NPR) அமல்படுத்தபட மாட்டாது, மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், குறைந்த விலை உணவு வழங்க 100 இந்திரா கான்டீன்கள் போன்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.