குஜராத் மாநிலம் நவஸ்ரீயில் பக்தி கீதங்களை பாடிய கீதா ராபரி என்ற பாடகி மீது பக்தர்கள் பணமழையை பொழிந்தனர். பத்து ரூபாய் தாள் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை மழை போல் அவர்மீது வீசப்பட்டன.
அங்கிருந்த சிறுவர்கள் மூலம் பாடகியின் உதவியாளர்கள் வாளிகளில் கத்தை கத்தையாக பணத்தை அள்ளிச் சென்றனர். பணம் எண்ணும் இயந்திரம் மூலம் நோட்டுகள் எண்ணப்பட்டு சேகரிக்கப்பட்டன. உள்நாட்டு கரன்சியுடன் டாலர் போன்ற வெளிநாட்டு கரன்சிகளும் பாடகியின் மீது பொழிந்தன. இது போல பாடகர்களை கௌரவிப்பது மரபு என விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.