குழந்தைகளை கடத்திச் சென்று அவர்கள் உடலில் உள்ள உறுப்புகளைத் திருடி விற்கும் கொடிய மனிதாபிமானமற்ற குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த மும்பையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாலிவுட் நட்சத்திரம் ரவீனா டாண்டன் , குழந்தைகளிடம் குழந்தை கடத்தல் குற்றங்களைக் குறித்து விளக்கி விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
உறுப்புகளைக் களவாடுபவர்களிடமிருந்து தப்புவதுடன் உறுப்பு தானத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த இந்த சந்திப்பு அரியதொரு வாய்ப்பாக இருந்ததாக ரவீனா டாண்டன் தெரிவித்தார்.