பி.எஸ்.6 எரிபொருளுக்கு மாறுவதால் ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் சஞ்சீவ் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது பயன்பாட்டில் உள்ள பி.எஸ்.-4 ரக எரிபொருள் உபயோகம் வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் என்றார்.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் 100 சதவீதம் பி.எஸ்.-6 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.