கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயத்தால், உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, N95 ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.
மருத்துவ உபகரண தயாரிப்பாளர்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்வார்கள். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்திய மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்தன.
இந்நிலையில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்களான என்-95 ரக முகமூடி, உடல் முழுவதும் மூடும் வகையிலான தற்காலிக மருத்துவ உடைகள் உள்ளிட்ட அனைத்து வகை, நோய் முன்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது.