நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு இன்று நிறைவேற்றப்பட இருந்த தூக்குதண்டனையை டெல்லி நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான வினய் ஷர்மாவின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
ஏற்கனவே முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை, நேற்று மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளியான வினய் ஷர்மாவின் கருணை மனு மீது குடியரசு தலைவர் முடிவெடுக்காததால், ஒரே வழக்கின் குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது எனக் கூறிய நீதிபதி, மறு உத்தரவு வரும் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் வினய் ஷர்மாவின் கருணை மனுவையும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.