வரும் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6 முதல் 6.5 சதவீதமாக உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்தியாவில் முதலீடு வாய்ப்புகள் குறைந்து.
இதன் காரணமாகவே கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்காத பொருளாதார மந்தநிலையை இந்தியா எதிர்கொள்ள நேரிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில் மேக் இன் இந்தியா திட்டம், பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு போன்றவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.