பிரபல ஐ.டி.நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித்அலி நீமுச்வாலா (Abidali Z. Neemuchwala) திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக அவர் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாவும், அதே சமயம் புதிய நபர் பொறுப்பேற்கும் வரை அவர் இந்தப் பதவிகளில் தொடர்வார் என்றும் விப்ரோ விளக்கம் அளித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருந்து, விப்ரோவின் சர்வதேச வளர்ச்சிக்கு, ஆபித்அலி நீமுச்வாலா சிறப்பான பங்கை அளித்துள்ளதாக, அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.