கேரள மாநிலத்தில் திருடி செல்லப்பட்ட பென் டிரைவை (pen drive) கேட்டு, திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் கடிதம் எழுதியிருக்கும் விநோதம் நடைபெற்றுள்ளது.
தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 7 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கேமரா திருட்டு போனது. இதேபோல் அண்மையில் 3 மடிக்கணினிகள், ஒரு பென் டிரைவ், சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க் ஆகியவை திருட்டு போனது. பென் டிரைவில்தான், வருகைப்பதிவேடு உள்ளதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் திருடனுக்கு கடிதம் எழுதி, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அன்புள்ள திருடனுக்கு என்று ஆரம்பிக்கும் அந்தக் கடிதத்தில், தங்களுக்கான ஊதியத்தை தீர்மானிக்கும் பென் டிரைவை மட்டும் தந்துவிடும்படி திருடனிடம் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.