மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற, மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின்போது அங்கு அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அப்பகுதி காவல்துறை ஆணையரின் செயல் குறித்து, அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பராக்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது, ஆளுநர் ஜகதீப் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, காவல் ஆணையரான மனோஜ் வெர்மா என்பவர், விழாவின் முன்வரிசையில் அமர்ந்து சாகவாசமாக செய்தித்தாள் படித்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த ஆளுநர் ஜகதீப் தங்கார், பொது வெளியிலேயே காவல் ஆணையரை கடிந்துகொண்டார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.