கொரோனா வைரஸ் பீதியால் சீனாவின் ஊகான் நகரம் இயல்புநிலை குலைந்து போயிருக்கும் நிலையில், அங்கு படிக்கும் 250 மாணவர்களை முதற்கட்டமாக இன்று இந்தியா அழைத்து வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளளது.
ஏர் இந்தியா, இன்டிகோ போன்ற விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவுக்கு விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர சீன அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
ஊகான் நகரில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் பல்வேறு நாட்டவர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.
முதற்கட்டமாக இந்தியாவுக்கும் இன்று 250 மாணவர்கள் ஊகானிலிருந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்து கவனிக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.