இயற்கை எரிவாயுவை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இயற்கை எரிவாயுவுக்கு மாநிலங்கள் 3 முதல் 20 சதவீதம் வரை மதிப்பு கூட்டு வரியும்,கலால் வரியும் விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் இயற்கை எரிவாயு ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்பட்டால் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டு விலை குறைய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது அதன் பயன்பாட்டை அதிகரிப்பதோடு உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும் என்றார். இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.