அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும் போது, குஜராத்திலுள்ள சபர்மதி நதி முகத்துவாரத்தை பார்வையிட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
வடக்கு டெல்லியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஆசியாவிலேயே தூய்மையான நதியான சபர்மதியை, இந்தியா வந்த ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ஏற்கனவே பார்த்து வியந்ததாக குறிப்பிட்டார்.
அதே போல் விரைவில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சபர்மதி ஆற்றை பார்வையிட இருப்பதாகக் கூறினார். மேலும் அந்த சமயத்தில் அமெரிக்காவில் நடைபெற்றதை போலவே குஜராத்தின் மோதேரா அரங்கில் ஹவுதி மோடி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும், விஜய்ரூபானி கூறினார். அதிபர் டிரம்ப் பிப்ரவரி 24 முதல் 26ம் தேதிக்குள் இந்தியா வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.