பிரதமர் மோடியை இறைவன் ராமருடனும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனுமனுடனும் பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சிவ்ராஜ் சிங் செளஹான் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மட்டியாலாவில் ((matiala)) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமல்படுத்தபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும், பிரதமர் மோடி எந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத சிங்கம் போன்றவர் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இறைவன் ராமர் என்றால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமன் என்று தெரிவித்த சிவ்ராஜ் சிங் செளஹான், குடியுரிமை திருத்த சட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் நிரூபிக்க முடியுமா எனவும் சவால் விடுத்தார்.