ஆந்திர மாநில கிராமம் ஒன்றில் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால்,மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இளைஞரை தொட்டில் கட்டி 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றிய பரிதாபம் அரங்கேறியுள்ளது.
விஜயநகரம் மாவட்டம் (Vizianagaram district) தரபார்த்தி (Daraparti ) கிராமத்தை சேர்ந்த ஜரதா நாகராஜூ என்ற இளைஞர், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அக்கிராமத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதையடுத்து தொட்டில் கட்டி அதில் நாகராஜூவை படுக்க வைத்து 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர்.