நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய தரவுகளை (data on police organisations) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறையில் மொத்தம் 25 லட்சத்து 95 ஆயிரத்து 435 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 20 லட்சத்து 67 ஆயிரத்து 270 பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 லட்சத்து 28 ஆயிரத்து 165 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 503 பேருக்கு ஒரு காவலர் என்று அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 632 பேருக்கு ஒரு காவலர் பணியாற்றி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மொத்த காவல் பணியிடங்களில் 20 சதவீதம் காலியாக இருப்பதாகவும் அந்த தரவுகளில் கூறப்பட்டுள்ளது.