இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி, நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற காட்சி, இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சர்வதேச தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பு சார்பில், ரத்தன் டாட்டாவிற்கு TIEcon விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. டாட்டாவிற்கு விருதை வழங்கிய நாராயணமுர்த்தி அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார்.
இந்தப் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரத்தன் டாட்டா, நாராயணமூர்த்தியின் செயல்பாடு தம்மை மிகவும் நெகிழச் செய்து விட்டதாகவும், அவரது கையால் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். சமூகவலைதளங்களில் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள பலரும் இரு தொழிலதிபர்களையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.