‘டிக்டாக்’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும். என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கு மனநல கல்வி மேம்பாட்டு பயிற்சி தொடக்கவிழாவில் பேசிய அவர், நாட்டில் மக்களிடையே
மன அழுத்தம் அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அவர் கூறினார். சம்பாதிக்கும் போராட்டத்தால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூகவலைதளம் பல குடும்பங்களை சீரழித்துள்ளதாக கூறிய அவர், டிக்டாக் போன்ற செயலிகளை முதலில் ஒழிக்க வேண்டும் என்றார்.