ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா மகள், தமது தந்தை கொலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது அந்த மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகனின் சித்தப்பாவும் முன்னாள் அமைச்சருமான விவேகானந்த ரெட்டி, கடப்பாவிலுள்ள வீட்டில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் விசாரணைக்கு உத்தரவிட்டார். பின்னர் ஜெகன் முதலமைச்சராக பதவியேற்றபிறகும் தனியே விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி (Sunitha Narreddy) சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்தும், ஜெகன் உள்ளிட்ட குடும்பத்தினரின் செயல்பாடு குறித்தும் சந்தேகம் எழுப்பி மனு தாக்கல் செய்துள்ளார்.