பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள விமான நிலையத்தில், செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது, போலீசார் தாக்குதல் நடத்த முயன்று தள்ளிவிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜீல் இமாம், தேச விரோத வழக்கில் தேடப்பட்ட நிலையில், பாட்னாவில் கைது செய்யப்பட்டார். இவரை, டெல்லிக்கு கொண்டு செல்ல ஜெகனாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவரை, விமானம் மூலம், போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்த செய்தி சேகரிப்பதற்காக, பாட்னா விமான நிலையத்தில், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்த போலீசார், அவர்களை தள்ளிவிட்டனர். இதில், ஏ.என்.ஐ ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.