பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து, பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் நினைவுபடுத்தும் புதிய சேவையை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன.
10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் தற்போது பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான நாடுகள் காலாவதியாக குறைந்தது 6 மாதத்திற்கு மேல் அவகாசம் கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்போரை மட்டுமே தங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்கின்றன.
இதனால் காலாவதி ஆகும் நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறந்துவிட்ட பலர், வெளிநாடுக்கு செல்வதில் பிரச்னையை சந்திக்கின்றனர். இந்நிலையில், பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதியிலிருந்து 9 மாதத்துக்கு முன்பும், 7 மாதத்துக்கு முன்பும் பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு 2 முறை எஸ்எம்எஸ் அனுப்பி நினைவுபடுத்தும் சேவையை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன.