நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரின்போது, குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அத்துடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாஜக கடுமையாக விமர்சிக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.